கரூரில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் மேலும் பேசியது: கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியதன் அடிப்படையில் தான் கரூர், புதுகை ஆகிய மாவட்டங்களின் தலைவர்கள் மாற்றப்பட்டனர். நான்கூட ஆயுள்காலம் முழுவதும் தலைவனாக இருக்க முடியாது. மாற்றங்கள் இயல்பானவை. இதை ஏற்றுக்கொண்டால் கட்சியில் பிரச்னை கிடையாது. காங்கிரஸ் கட்சி மதம், ஜாதி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சி. தமிழகத்தில் 65,000 பூத்துகள் உள்ளன. பூத்துக்கும் 5 பேரையாவது நியமித்து பணியாற்றினால் மட்டுமே, வரும் தேர்தலில் மக்களைச் சந்தித்து ஓட்டுகேட்க முடியும். இப் பணியில் கட்சியினர் விரைந்து செயலாற்ற வேண்டும். இனிவரும் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் தான் ஆட்சி அமையும். பிரதமர் மோடி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மோடி அலை மூழ்கி, ராகுல் அலை தான் இப்போது வீசுகிறது. உலகத்திலேயே எங்கும் மக்கள் மீது 27 சதவீத வரி விதித்தது கிடையாது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மத்தியில் நடப்பது கோடீஸ்வரர்களின் ஆட்சி. மதத்தால் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் ஆட்சி. விரைவில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலரும் என்றார்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன், மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

அதிமுக வென்றதும் பயிா்க்கடன் தள்ளுபடி: தச்சை என்.கணேசராஜா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

