கரூரில் தேவேந்திர குல வேளாளர் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சார்பில் 2017-18 ஆம் ஆண்டில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில், அரசு பொதுத்தேர்வில் மற்றும் விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு ஹரியாணா மாநில காவல்துறை துணைத் தலைவர் வீ. காமராஜா, தேனி மாவட்ட வன அலுவலர் சு.கௌதம் சுப்ரமணியன், மத்திய தொழிலாளர் ஆணையத்தின் எஸ். சுப்புராஜ், இந்திய லங்காடி அணித்தலைவர் இ.தேவசித்தம் ஆகியோர் பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். விழாவில் வ.குமரவேல், கு.பரணிதரன் உள்ளிட்ட தேவேந்திர குல வேளாளர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவில், பள்ளர் இனத்தை தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து எஸ்.சி., பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

