கரூர் பசுபதிபாளையத்தில் வீடு புகுந்து 2 சவரன் நகையைத் திருடிய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் பசுபதிபாளையம் ஆண்டாள்நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவரது வீட்டுக்குள் சனிக்கிழமை காலை புகுந்த மர்ம நபர்கள் உள்ளே பீரோவில் இருந்த 2 சவரன் நகையை திருடிக்கொண்டு வெளியே வந்தபோது அங்கு வந்த செந்தில்குமார் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து பசுபதிபாளையம் போலீஸில் ஒப்படைத்தார். போலீஸார் அவர்களைக் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சண்முகசுந்தரம் (18), கரூர் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜா மகன் முருகன் (19) எனத் தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







