தமிழகத்தில் ஏழைகளை பாதுகாக்கும் அரசை அமைக்க எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்றார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன்.
கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் வியாழக்கிழமை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக கரூருக்கு புதன்கிழமை மாலை வந்த அவருக்கு தவிட்டுப்பாளையத்தில் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் வேலாயுதம்பாளையம், வெங்கமேடு வழியாக கரூரில் உள்ள தனியார் ஓட்டலுக்குச் செல்லும் வழியில் மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், இன்று தமிழகத்தில் நடைபெறும் இந்த மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்.
விவசாயிகள் பிரச்னையாக இருந்தாலும் சரி, நீட் தேர்வு பிரச்னையாக இருந்தாலும் சரி, தமிழகத்திற்கு மக்கள் விரும்பாத திட்டங்களை தடுத்து நிறுத்தி, நல்லதொரு அரசாங்கத்தை ஏழை, எளிய மக்களுக்கு பாதுகாப்பும் தரும் அரசை கொடுப்போம். எனவே எங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் லோகநாதன், துணைச் செயலர் தாரணிசரவணன், நகரச் செயலர் கோல்டுஸ்பாட் ராஜா, காதப்பாறை ஊராட்சி முன்னாள் தலைவர் ஏ. தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் அன்பே டயானா எப்போது?

நிலச்சரிவால் சார்தாம் யாத்திரை இரு நாள்கள் நிறுத்தம்!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

ஹூமா குரேஷி பிறந்த நாள்... டாக்ஸிக் சிறப்பு போஸ்டர்!
விடியோக்கள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கண்ணீர்


