சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சாரண, சாரணீயர்களுக்கு ராஜ்ய புரஷ்கார் விருது

சென்னை ஆளுநர் மாளிகையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர், கரூர் பரணிபார்க் கல்விக் குழுமத்தின் 1,084 சாரண, சாரணீயர்களுக்கு ராஜ்ய புரஷ்கார் விருது வழங்கிப் பாராட்டினார். 

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

சென்னை ஆளுநர் மாளிகையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர், கரூர் பரணிபார்க் கல்விக் குழுமத்தின் 1,084 சாரண, சாரணீயர்களுக்கு ராஜ்ய புரஷ்கார் விருது வழங்கிப் பாராட்டினார். 
பாரத சாரணர் இயக்கம் மூலம் ஆண்டுதோறும் சாரண, சாரணீயர்களுக்கு மாநில அளவில் ராஜ்ய புரஷ்கார் மற்றும் தேசிய அளவில் ராஷ்ட்ரபதி விருதுகள் முறையே மாநில ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாக்களில் வழங்கப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான மாநில அளவிலான ராஜ்ய புரஷ்கார் விருது வழங்கும் விழா சென்னை ஆளுநர் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது. இதில், கரூர் பரணிபார்க், பரணி வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 1,084 சாரண, சாரணீயர்கள் உள்பட 
தமிழகம் முழுவதும் இருந்து விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட சாரண, சாரணீயர்களுக்கு மாநில ஆளுநர் விருதுகள் வழங்கிப் பாராட்டினார். 
கரூர் பரணிபார்க் கல்விக்குழுமத்தில் இருந்து மிக அதிக எண்ணிக்கையில் சாரண, சாரணீயர்களுக்கு மாநில அளவிலான விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 
தொடர்ந்து, விருதுபெற்ற சாரண, சாரணீயர்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவில், பரணிபார்க் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.மோகனரெங்கன், பரணிபார்க் மாவட்ட சாரணீயர் பிரிவு மாவட்ட ஆணையர் பத்மாவதி மோகனரெங்கன், பரணிபார்க் மாவட்ட சாரணர் ஆணையர் சொ. ராமசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.