கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் மாதிரி தேசிய திறனறிதல் தேர்வு மற்றும் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு ஆண்டுதோறும் நாடு தழுவிய அளவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக தேசிய திறனறிதல் தேர்வை நடத்துகிறது. இதில் தேசிய அளவில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பிளஸ்-1 வகுப்பில் தொடங்கி ஆராய்ச்சி படிப்பு வரையிலான கல்வி பயிலும் காலம் முழுமைக்கும் மத்திய அரசு மாதந்தோறும் மெரிட் கல்வி உதவித்தொகை வழங்கி கெளரவிக்கிறது.
தேசிய திறனறிதல் தேர்வின் முதல் நிலையை அந்தந்த மாநில கல்வித் துறையும், இறுதி தேர்வை மத்திய கல்வித் துறையும் நடத்துகிறது.
இதற்காக பரணி பார்க் கல்வி குழுமம் சார்பில், முன்னணி போட்டித் தேர்வு பயிற்சி மையமான குரோத் அகாதெமி, அனுபவம் வாய்ந்த ஆந்திர மாநில பயிற்சியாளர்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து பெறப்பட்ட பயிற்சிப் பாடங்கள் துணையுடன் பரணி பார்க், பரணி வித்யாலயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் கடந்த ஒரு ஆண்டாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இறுதி மற்றும் 10 ஆவது மாதிரி தேர்வு, கருத்தரங்கம் சனிக்கிழமை பரணி கல்வி வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய அளவிலான போட்டித் தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகளை "குரோத் அகாதெமி' பயிற்சி மைய இயக்குநர் பேராசிரியை கவிதா மற்றும் ஆந்திர மாநில சிறப்பு பயிற்சியாளர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் விளக்கினர்.
நிகழ்வில், பரணி பார்க் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலர் பத்மாவதி, முதன்மை முதல்வர் முனைவர்.ராமசுப்ரமணியன், "குரோத் அகாதெமி' பயிற்சி மைய இயக்குநர் பேராசிரியை கவிதா, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் கலந்து கொண்டு அனைத்து பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் காணிக்கை... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


