அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி  பிரிவு நிர்வாகிகள் கூட்டம்

கரூரில்  மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு வட்டார, நகரத் தலைவர்கள் அறிமுகக் கூட்டம், கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

Updated On :8 அக்டோபர் 2018, 8:39 am IST

கரூரில்  மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு வட்டார, நகரத் தலைவர்கள் அறிமுகக் கூட்டம், கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 
மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கிராமம் தோறும் பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, வரும் மக்களவைத் தேர்தலில் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க அனைத்து கிராமங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபடுவது மற்றும் சாயக்கழிவு பிரச்னை, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
நிர்வாகிகள் வடிவேல், மகாமுனி, சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிதாக நியமனம் செய்யப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு காங்கிரஸ் வட்டார தலைவர்களை காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.