அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இனி வரும் காலங்களில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களின் 

Updated On :8 அக்டோபர் 2018, 9:19 am IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இனி வரும் காலங்களில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். லண்டனில் இருந்து விரைவில் எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் அடுத்த வாங்கலில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாருவது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
கரூர் தொகுதிக்குட்பட்ட பாப்புலர் முதலியார் வாய்க்கால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் சர்வே மூலம் சுமார் ரூ.30 லட்சத்தில் தூர்வாரப்பட உள்ளது.  இதற்காக எனது சொந்த நிதியைச் செலவிட உள்ளேன். புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 400 கோடியில் விரைவில் கதவணை கட்டப்பட உள்ளது.   
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிதி நவம்பர் மாதத்தில் இருந்து கொடுக்க வேண்டியுள்ளது.  டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதிச்சுமை இருக்கிறது. விரைவில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ரூ.12,800 கோடி நிதியை ஏழாண்டுகளில் வழங்கியுள்ளோம்.  நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சென்னையில் இருந்து மட்டும் 5 இடங்களில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது.  வாகன லைசென்ஸ் எடுக்க செல்லிடபேசி மூலம் பணம் கட்டும் வசதியைக் கொண்டு வந்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.