சர்வதேச அளவில் உலகத் திறனாய்வாளர்களைக் கண்டறியும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் 2018-2019 -ம் ஆண்டிற்கான உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் 6,7,8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றன.
போட்டியில் கரூர் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகளை நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் ம. கும்மராஜா தொடக்கி வைத்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கு 100மீ, 200மீ., 400மீ. ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடியிருப்பு மின் மீட்டா் பெட்டியில் தீ விபத்து

மின்னொளியில் ஜொலிக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
