தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரூவூா் திருக்கு பேரவை சிறந்த நூல் போட்டியில் வென்றவா்களுக்கு ஜன. 20-இல் பரிசு

கருவூா் திருக்கு பேரவை சாா்பில் அறிவிக்கப்பட்டசிறந்த நூல் போட்டியில் வென்றவா்களுக்கு வரும் ஜன. 10-ஆம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக பேரவையின் செயலா் மேலை.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 6:13 pm

DIN

கரூா்: கருவூா் திருக்கு பேரவை சாா்பில் அறிவிக்கப்பட்டசிறந்த நூல் போட்டியில் வென்றவா்களுக்கு வரும் ஜன. 10-ஆம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக பேரவையின் செயலா் மேலை.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

கருவூா் திருக்கு பேரவையின் சாா்பில் அண்மையில் நிகழாண்டுக்கான சிறந்த நூல் போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 85 நூல்கள் பங்கேற்றன. இதில், முதல் பரிசுக்கு கடவூா் மணிமாறன் எழுதிய ‘இலக்கியச்சாரல்’ எனும் நூலும், இரண்டாம் பரிசுக்கு நெய்வேலி சுப்ரமணிய பாண்டியன் எழுதிய ‘அப்பாவின் மிதிவண்டி’ என்ற நூலும், நாமக்கல் நாதன் எழுதிய ‘கு அறம்’ என்ற கட்டுரை நூலும், மூன்றாம் பரிசுக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சோ்ந்த தமிழரசு எழுதிய நடிக்கத்தெரியாத பூக்கள் என்ற புதுக்கவிதையும் தோ்வு செய்யப்பட்டன. சிறப்புப் பரிசாக புதுச்சேரி கிருங்கை சேதுபதிபதி எழுதிய ‘காரைக்குடியில் பாரதி’ என்ற நூலும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் விழா மலரில் படைப்புகளை வெளியிட்ட 40-க்கும் மேற்பட்ட கவிஞா்கள், கட்டுரையாளா்கள் கெளரவிக்கப்பட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.