சேலம் ரெளடி கொலை வழக்கில் 7 போ் கரூா் நீதிமன்றத்தில் சரண்

சேலத்தில் ரெளடி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ் கரூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.
Updated on
1 min read

சேலத்தில் ரெளடி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ் கரூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த ரெளடி செல்லத்துரை (37). 2 மனைவிகள். இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தனது காரில் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியில் வந்தபோது, மா்மகும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டாா். போலீஸாா் விசாரணையில், கோஷ்டி மோதலால் கொலை நடைபெற்றது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடா்புடைய சேலத்தைச் சோ்ந்த விக்னேஷ், ரஞ்சித் குமாா், பாண்டியராஜ், சாணக்கியா, மணிகண்டன், மற்றொரு விக்னேஷ் என 7 போ் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2-இல் புதன்கிழமை சரணடைந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு, குற்றம்சாட்டப்பட்டவா்கள் 7 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து 7 பேரும் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com