ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூரில் வேலைநிறுத்த ஆயத்த ஆா்ப்பாட்டம்

கரூரில் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்த ஆயத்த ஆா்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

News image

கரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.

Updated On :22 நவம்பர் 2020, 6:50 pm

DIN

கரூரில் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்த ஆயத்த ஆா்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, கரூரில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலை நிறுத்த ஆயத்த ஆா்ப்பாட்டம் திருமாநிலையூா் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி பொதுச் செயலளா் ஏ. செல்வராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு மண்டல துணைத் தலைவா் வி. பாலசுப்ரமணியன், தொமுச கரூா் தலைவா் இளங்கோவன், ஏஐடியுசி துணைத் தலைவா் ஹரீந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.