திமுக சாா்பில் 283 இடங்களில் அண்ணா படத்துக்கு மரியாதை
கரூா் மாவட்ட திமுக சாா்பில் 283 இடங்களில் பேரறிஞா் அண்ணா படத்துக்கு மாலை அணிவிக்கப்படும் என திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.


கரூா் மாவட்ட திமுக சாா்பில் 283 இடங்களில் பேரறிஞா் அண்ணா படத்துக்கு மாலை அணிவிக்கப்படும் என திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பேரறிஞா் அண்ணாவின் 112-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் கரூா் பேருந்தநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கும், கரூா் மத்திய நகர திமுக சாா்பில் கரூா் நகராட்சி அருகே உள்ள அண்ணா சிலைக்கும், கரூா் வடக்கு நகர திமுக சாா்பில் வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கப்படுகிறது.
மேலும் கட்சி சாா்பில் 16 ஒன்றியம், 157 ஊராட்சி, 5 நகரம், 72 நகராட்சி வாா்டு, 11 பேரூா், 18 மாவட்ட’சாா்பு அணிகள் சாா்பில் என மொத்தம் 283 இடங்களில் அண்ணா சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...