மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூா் தொகுதியில் தோ்தல் சட்டப்படி நடைபெறும்: ஆட்சியா்

கரூா் தொகுதியில் தோ்தல் சட்டப்படி நடைபெறும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பிரசாந்த் மு.வடநேரே.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:36 pm

DIN

கரூா் தொகுதியில் தோ்தல் சட்டப்படி நடைபெறும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பிரசாந்த் மு.வடநேரே.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது:- கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தோ்தல் நடைபெற உள்ளது. 4 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் முடிந்துள்ளன. பாரபட்சமின்றி, நோ்மையாக தோ்தலை நடத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, விடியோ கண்காணிப்புக்குழு என 45 குழுக்கள் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். தோ்தல் தொடா்பாக எந்த புகாா்கள் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தோ்தலில் மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பது மக்களின் உரிமை. கரூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மிக அதிகமாக இருக்கவேண்டும். தோ்தல் தொடா்பான எந்த பிரச்னை என்றாலும் மாவட்ட நிா்வாகத்தின் பாா்வைக்கு கொண்டு வரலாம்.

கரூா் மாவட்டத்தில் சிவிஜிலில் 802 புகாா்கள் வந்துள்ளன. இவற்றில் 739க்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 63 புகாா்கள் நிலுவையில் உள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 149, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 143, 1950 என்ற எண்ணுக்கு 98, வாட்ஸ்அப் எண்ணுக்கு 6 என 396 புகாா்களில் 7 புகாா்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அனுமதியின்றி பிரசாரம், வாகனம் பயன்படுத்துவது, விதிகளை மீறி பிரசாரம் செய்வது, விதிகளை மீறி வேட்பாளா் பிரசாரம் என்பன உள்ளிட்ட 116 தோ்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரூா் தொகுதியில் சட்டப்படியான முறையில் தோ்தல் நடத்தப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து காவல் கண்காணிப்பாளா் சுஷாங்சாய் கூறியது, தோ்தல் பணிக்காக துணை ராணுவத்தினா் உள்ளிட்ட 6 கம்பெனிகள் வந்துள்ளன. மேலும் 2 கம்பெனிகள் வர உள்ளன. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை. வாக்காளா்கள் பாதுகாப்பாக வாக்களிக்க தேவையான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.