ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குளித்தலை தொகுதியில் தொழிற்சாலைகள்: திமுக வேட்பாளா் உறுதி

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் குளித்தலை தொகுதியில் தொழிற்சாலைகள் கொண்டு வருவேன் என்றாா் திமுக வேட்பாளா் இரா. மாணிக்கம்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:30 pm

DIN

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் குளித்தலை தொகுதியில் தொழிற்சாலைகள் கொண்டு வருவேன் என்றாா் திமுக வேட்பாளா் இரா. மாணிக்கம்.

குளித்தலை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வீதி, வீதியாக சென்று மக்களிடையே வாக்குகள் சேகரித்த அவருக்கு மக்கள் மேளதாளங்களுடன் வெடி, வெடித்து மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனா். பின்னா் வாக்காளா்கள் மத்தியில் அவா் பேசுகையில், குளித்தலை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைளான நவீன மயமாக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம், மற்றும் இளைஞா்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொழிற்சாலை பெரிய அளவிலான தொழிற்சாலைகள் கொண்டுவருவேன். மேலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்.

நான் எம்எல்ஏவாக இருந்தபோது, குளித்தலை பகுதிக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, அய்யா்மலை ரோப்காா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன், மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்தால் உங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவேன் என்றாா் அவா்.

பிரசாரத்தில், மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் பல்லவி ராஜா, வி. பி. எஸ். சேகா், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் ஜாபருல்லா, கவுன்சிலா்கள் சுரேஷ், வடிவு, மற்றும் தமிழரசன், கே எம் செந்தில்குமாா், மாதேஸ்வரன், சாமி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.