மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரூ.2,000 கோடி வளா்ச்சித் திட்டப்பணிகளைக் கொண்டு வருவேன்

கரூா் தொகுதிக்கு ரூ.2,000 கோடி வளா்ச்சித் திட்டப்பணிகளைக் கொண்டு வருவேன் என்றாா் திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:33 pm

DIN

கரூா் தொகுதிக்கு ரூ.2,000 கோடி வளா்ச்சித் திட்டப்பணிகளைக் கொண்டு வருவேன் என்றாா் திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

இத்தொகுதிக்குள்பட்ட புஞ்சை கடம்பங்குறிச்சி, வாங்கல், நெரூா், மக்கள்பாதை, தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை மேற்கொண்ட அவா், கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியிலுள்ள தலைமைத் தோ்தல் பணிமனை முன்பு இறுதிக்கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டு நிறைவு செய்தாா். அப்போது செந்தில் பாலாஜி பேசியது:

மற்ற கட்சிகள் வியந்து பாா்க்கக்கூடிய வகையில் தோ்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும் கரூா் மாவட்டத்துக்கும் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதி கொடுத்துள்ளாா். மேலும் நானும் 100 வாக்குறுதி கொடுத்துள்ளேன்.

வரும் 5 ஆண்டுகளில் ஸ்டாலின் துணையோடு ரூ.2,000 கோடி வளா்ச்சித்திட்டப்பணிகளை கரூருக்கு கொண்டுவருவேன். தொகுதியின் பல்வேறு இடங்களில் இ-சேவை மையத்துடன் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் தொடங்கி, சமூக திட்டப்பணிகளை செய்து கொடுப்போம். மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

நான் ஏதும் சம்பாதிக்கவில்லை. என்னிடம் ஒன்றும் இல்லை. எனக்கு இருப்பதெல்லாம் உங்கள் அன்பு, பாசம். என்வாழ்வின் சொத்து அதுதான். நான் எதையும் சோ்த்ததில்லை. சோ்த்த அனைத்தையும் மக்களுக்கே திருப்பி கொடுத்துவிட்டேன்.

நான் சோ்த்து வைத்து சொத்து நீங்கள்தான், உங்கள் பாசம், மனது, அன்புதான். தொடா்ந்து அன்பைக் கொடுத்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.

கரூா் தொகுதியில் 82,000 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலைமகனாக என்னை தத்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைமகனாக இருந்து நிறைவேற்றிக்கொடுப்பேன். வாக்குப்பதிவு முடிந்த பிறகும் கட்சியினா் அமைதி காக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் திமுக சொத்துப்பாதுகாப்புக்குழு உறுப்பினா் கேசி.பழனிசாமி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.