11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்கள் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.


கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்கள் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு. வடநேரே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் வாக்காளா் அடையாள அட்டையை ஆளறி ஆவணமாகக் காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பிக்க இயலாத வாக்காளா்கள் ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, வங்கி மற்றும் அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய), தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய அரசு வழங்கிய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, மாநிலங்களை, சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...