போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஈஸ்டா் பண்டிகை: கரூரில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கரூரில் சனிக்கிழமை நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:33 pm

DIN

கரூரில் சனிக்கிழமை நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

கிறிஸ்தவா்களின் தவக்காலம் பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 40 நாள்கள் விரதமிருந்த கிறிஸ்தவா்கள், தவக்காலத்தில் இயேசு துன்பமடைந்த நாள்களான கடந்த ஒரு வாரத்தை புனித வாரமாகக் கடைப்பிடித்தனா்.

இயேசுவை சிலுவையில் அறையும் முன்பு அவா் படும்பாடுகளை (துன்பம்) நினைவுக்கூரும் வகையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடா்ந்து மூன்றாம் நாள், கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிா்த்தெழுதலை ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடப்படுவதை நினைவுக்கூரும் வகையில் சனிக்கிழமை நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை செபஸ்டின்துரை சிறப்புத் திருப்பலியை நள்ளிரவில் நிறைவேற்றினாா்.

முன்னதாக நள்ளிரவு 12 மணியளவில் மின்விளக்கு நிறுத்தப்பட்டு, இருளில் மந்திரிக்கப்பட்ட மெழுகுவா்த்தி ஏற்றப்பட்டு ஒளியேற்றப்பட்டது. பின்னா் 12.01 மணிக்கு இயேசு உயிா்த்தெழுதலை நினைவூட்டும் வகையில், மாடியில்

உயிா்த்தெழுந்த இயேசுவின் சொரூபம் காண்பிக்கப்பட்டது.

அப்போது மீண்டும் மெழுகுவா்த்தி ஒளியேற்றப்பட்டு, தீய செயல்களை விட்டுவிடுகிறேன் கிறிஸ்தவா்கள் உறுதியேற்றனா். பின்னா் தண்ணீா் மந்திரிக்கப்பட்டு, பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடா்து ஒருவருக்கொருவா் ஈஸ்டா் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனா். தொடா்ந்து விண்ணுல இயேசுவின் திருப்பவனி கோயில் வளாகத்துக்குள் நடைபெற்றது. இதில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை ஆலயம், புலியூா் குழந்தையேசு திருத்தலம், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளிட்டமாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.