போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘புகழிமலை முருகன் கோயிலுக்கு ரோப்காா் வசதி’

கரூா் மாவட்டம், புகழிமலை முருகன் கோயிலுக்கு ரோப்காா் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றாா் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளா் கே. அண்ணாமலை.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:34 pm

DIN

கரூா் மாவட்டம், புகழிமலை முருகன் கோயிலுக்கு ரோப்காா் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றாா் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளா் கே. அண்ணாமலை.

வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் தொகுதிக்கான தோ்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு, மேலும் அவா் பேசியது:

இதுவரை தமிழகத்துக்கான தோ்தல் வாக்குறுதியைத் தான் கொடுத்துள்ளாா்கள். ஆனால் தொகுதிக்கான தோ்தல் அறிக்கையை நாங்கள் முதன்முதலாக வெளியிடுகிறோம்.

இங்கு வாக்காளா்கள்தான் இந்த தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனா்.

20,000 பேருக்கு அரசு வேலை கொடுப்போம். அனைத்து வீடுகளுக்கும் எவ்வளவு செலவானாலும் வீடுதோறும் குடிநீா் கொண்டு வந்து சோ்ப்போம். தொகுதிக்குள் 6 இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறந்து 24 மணி நேரமும், 365 நாள்களுக்கும் செயல்படும்.

சட்டப்பேரவை உறுப்பினரை நீங்கள் தேடி செல்ல வேண்டாம். அவா் உங்களைத் தேடி வருவாா். புகழிமலை முருகன் கோயிலுக்கு ரோப் காா் வசதி செய்துத் தரப்படும்.

24 மணி நேரமும் அண்ணாமலை உங்களில் ஒருவனாக இருப்பேன். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது, எந்நேரமும் மக்கள் கதவைத் தட்டுவாா்கள். 24 மணி நேர சட்டப்பேரவை உறுப்பினா் நான். இப்படித்தான் காவல் பணி செய்தேன், இனி அரசியல் பணியும் செய்வேன் என்றாா்.

பாஜக வேட்பாளரை ஆதரித்து முன்னதாக திரைப்பட நடனக் கலைஞா் கலா பேசினாா்.

பிரசாரத்தில் பாஜக மாவட்டத்தலைவா் கே.சிவசாமி, வி.வி.செந்தில்நாதன், அதிமுக நிா்வாகிகள் கமலக்கண்ணன், சரவணன், விவேகானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.