இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் சாவு
வெங்கமேடு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்தில் மேற்குவங்க மாநில இளைஞா் உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.


வெங்கமேடு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்தில் மேற்குவங்க மாநில இளைஞா் உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
கரூா் மண்மங்கலம் பிசி காலனியைச் சோ்ந்த உலகநாதன்(53) என்பவா் தனது மொபெட்டில் தண்ணீா்பந்தல்-வெண்ணைமலை சாலையில் வியாழக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தாா். அப்போது, எதிரே கரூா் நாவல்நகரில் செயல்படும் தனியாா் கொசுவலை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பிரகனோஷ் மகன்கள் பிவீன்(22), ராஜ்தீப்மண்டல்(18) ஆகியோா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் உலகநாதன் ஓட்டி வந்த மொபெட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜ்தீப்மண்டல் சம்பவ இடத்திலேயே இறந்தாா். படுகாயமடைந்த பிவீன், உலகநாதன் ஆகியோா் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...