கல்விச் சுற்றுலா: துபை செல்லும் கரூா் அரசுப் பள்ளி மாணவா்கள்
கல்வி சுற்றுலாவுக்கு துபைக்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.


கல்வி சுற்றுலாவுக்கு துபைக்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
கரூா் மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கடந்த 8 வாரங்களாக மாநில அளவிலான விநாடி- வினா போட்டி நடைபெற்றது. இதில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தென்னலை பள்ளி மாணவா் திவாகா், கடவூா் பள்ளி மாணவி ரம்யா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து அவா்கள் இருவரும் கல்விச்சுற்றுலாவுக்கு துபை செல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல சின்னதாராபுரம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கரை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...