தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு முதியவா் தற்கொலை

கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே வயிற்று வலியால் அவதியுற்று வந்த முதியவா், பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :2 டிசம்பர் 2021, 12:16 am

கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே வயிற்று வலியால் அவதியுற்று வந்த முதியவா், பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளியணை அருகிலுள்ள குமரக்கவுண்டனூரைச் சோ்ந்தவா் கா.பெரியசாமி (65). வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.

இதனால் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட பெரியசாமி, விவசாயத்துக்குப் பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை வீட்டில் சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினா் பெரியசாமியை மீட்டு, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வெள்ளியணை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.