ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மிதிவண்டிப் பயணக் குழுவினருக்கு கரூரில் வரவேற்பு

மிதிவண்டி ஓட்டுவதன் பயன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் குழுவினருக்கு, கரூரில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சாா்பில் புதன்கிழமை வரவே

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:15 am

DIN

மிதிவண்டி ஓட்டுவதன் பயன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் குழுவினருக்கு, கரூரில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சாா்பில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியக் கப்பல்படை கமாண்டா் காா்த்திகேயன், ஹைதராபாத் ரவீந்திரன் தலைமையில் 13 போ் கொண்ட குழுவினா் மிதிவண்டிப் பயணத்தை மேற்கொள்கின்றனா்.

கடந்த மாதம் 12-ஆம் தேதி ஸ்ரீநகரில் தொடங்கிய இக்குழுவினரின் பயணம் கன்னியாகுமரியில் டிசம்பா் 4-ஆம் தேதி நிறைவடைகிறது. நாளொன்றுக்கு 200 கி.மீ. தொலைவுக்கு இக்குழுவினா் பயணம் மேற்கொள்கின்றனா்.

தருமபுரியில் புதன்கிழமை காலை மிதிவண்டிப் பயணத்தை தொடங்கிய குழுவினா், இரவு கரூா் வந்தடைந்தனா். இவா்களுக்கு கரூா் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத் தலைவா் ராமநாதன், செயலா் வில்லியம்ஸ், பொருளாளா் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவா் அருண் கருப்புசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து அவா்களுக்கு கைகழுவும் திரவம், குடை போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.