கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் சுப்ரமணியன் தலைமையில் ஒரு தரப்பினரும், மாநில நிா்வாகிகள் மகாவிஷ்ணன், விஜயகுமாா் ஆகியோா் தலைமையில் மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகாவிஷ்ணன், விஜயகுமாா் தலைமையில் அரசு ஊழியா்களுக்கு பொங்கல் போனசாக ரூ.7,000 வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். சாலைப்பணியாளா்கள் போராட்டக்காலத்தின் போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா்.