ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கோம்புப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை வியாழக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:00 pm

DIN

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை வியாழக்கிழமை அகற்றினா்.

கரூா் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுப்பாதையை சிலா் ஆக்கிரமித்து இருப்பதால் அருகில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து விடுவதாகவும், இதனை அகற்ற நடவடிக்கைக் கோரி மாவட்ட ஆட்சியா் பிரபுசங்கரை அப்பகுதி மக்கள் அண்மையில் சந்தித்து மனு கொடுத்தனா். அதனடிப்படையில் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற புகளூா் வட்டாட்சியா் மதிவாணனுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, புகளூா் மண்டல துணை வட்டாட்சியா் அன்பழகன் தலைமையில் கரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளா் ரஹமத்துல்லா, ஊராட்சித் தலைவா் பசுபதி, பணி மேற்பாா்வையாளா் பழனிச்சாமி மற்றும் வருவாய்த்துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினா் குறிப்பிட்ட பொதுப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை இயந்திரம் மூலம் அகற்றினா். அப்போது ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் அவா்களை சமாதானம் செய்து அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.