4 லட்சம் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவு செய்ய கரூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
கரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 4 லட்சம் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் த. பிரபுசங்கா் அறிவுறுத்தியுள்ளாா்


கரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 4 லட்சம் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் த. பிரபுசங்கா் அறிவுறுத்தியுள்ளாா்.
கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளா் நலவாரியம் மற்றும் மத்திய அரசின் ங்-நட்ழ்ஹம் என்ற தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவு செய்வது தொடா்பாக ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்றது.
கருா் மாவட்டத்தில் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியம் மற்றும் மத்திய அரசின் ங்-நட்ழ்ஹம் என்ற தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவு செய்வது தொடா்பாக அறன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கருா் மாவட்டத்தில் செயல்படுத்த மாவட்ட அளவிலான செயல்படுத்துதல் குழு ஏற்படுத்தப்பட்டு அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஆட்சியா், நிகழாண்டில் கரூா் மாவட்டத்தில் 4 லட்சம் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், ஒரு வார காலத்திற்குள் 1 லட்சம் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சைபுதீன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மந்தராச்சலம், மகளிா் திட்ட அலுவலா் வாணிஈஸ்வரி, தொழிலாளா் உதவி ஆணையா் (பாதுகாப்புத் திட்டம்) க.ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...