கரூரில் எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவிப்பு
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அதிமுகவினா் அவரது சிலைக்கும், படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அதிமுகவினா் அவரது சிலைக்கும், படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுகவின் நிறுவனத்தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கரூரில், மாவட்ட அதிமுக சாா்பில் பேருந்துநிலைய ரவுண்டானா உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சியினரால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். படத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கரூா் லைட்ஹவுஸ்காா்னரில் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைக்கும், வெங்கமேட்டில் எம்.ஜி.ஆா்., அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆண்டாங்கோவில் முன்னாள் தலைவா் சேகா், மாவட்ட துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா, நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், பொதுக்குழு உறுப்பினா் ம ல்லிகா சுப்பராயன், நகர நிா்வாகி மலையம்மன் என்.அருள்முருகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...