எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
கரூா் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி சாா்பில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை கரூா் பாலமலை பாலமுருகன் கோயில் பகுதியில் நடைபெற்றது.


கரூா் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி சாா்பில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை கரூா் பாலமலை பாலமுருகன் கோயில் பகுதியில் நடைபெற்றது.
முகாமை கல்லூரியின் தாளாளா் எஸ்.மோகனரெங்கன் தொடக்கி வைத்தாா். கல்லூரியின் செயலா் கே.பத்மாவதி மோகனரெங்கன், கல்லூரியின் இயக்குநா் முனைவா் சொ.ராமசுப்ரமணியன் ஆகியோா் மாணவ-மாணவிகளை வாழ்த்தி பேசினா். இதில் மாணவ, மாணவிகள் பாலமலை முருகன்கோயிலில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து நடுப்பாளையம் கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் முக்கிய வீதிகள் வழியாக வந்த மாணவ, மாணவிகள் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனா். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் முனைவா் பி.சாந்தி செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...