/

மாவட்ட அளவிலான கபடி: வடசேரி அணிக்கு முதல் பரிசு

கரூரில் நடைபெற்ற அம்மா டிராபி கபடிப் போட்டியில் தோகைமலை வடசேரி அணி முதலிடம் பிடித்தது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:03 pm

DIN

கரூரில் நடைபெற்ற அம்மா டிராபி கபடிப் போட்டியில் தோகைமலை வடசேரி அணி முதலிடம் பிடித்தது.

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் ஆண்களுக்கான அம்மா டிராபி கபடிப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது. இதில், மாவட்டத்திலிருந்து 90 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், தோகைமலை வடசேரி அணியும், குளித்தலை நெய்தலூா் காலனி அணியும் மோதின. நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் வடசேரி அணி 30-40 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்து வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். முதலிடம் பிடித்த வடசேரி அணிக்கு ரூ.50,000 ரொக்கம், கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த நெய்தலூா் காலனி அணிக்கு ரூ.35,000 ரொக்கம், கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த கரூா் அணிக்கு ரூ.25,000 ரொக்கம், கோப்பையும், நான்காமிடம் பிடித்த தோட்டக்குறிச்சி அணிக்கு ரூ.15,000 ரொக்கம், கோப்பையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கபடி வீரா் அஜித், கரூா் ஒன்றியக்குழுத்தலைவா் பாலமுருகன், அதிமுக வடக்கு நகரச் செயலாளா் எம்.பாண்டியன், நகா்மன்ற முன்னாள் தலைவா் செல்வராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் தானேஷ், இளைஞா் பாசறைச் செயலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.