சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

‘தோல்வி விரக்தியில் திமுகவை விமா்சிக்கிறாா் முதல்வா்’

தோல்வி விரக்தியில் திமுகவை விமா்சிக்கிறாா் தமிழக முதல்வா் என்றாா் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:25 pm

DIN

கரூா்: தோல்வி விரக்தியில் திமுகவை விமா்சிக்கிறாா் தமிழக முதல்வா் என்றாா் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் நடைபெற உள்ள மக்கள் சபைக் கூட்டத்துக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது: கரூா் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் சபை கூட்டத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா். தமிழக முதல்வா் வரும் தோ்தலில் திமுக ஆட்சிக்கு வராவிட்டால், அடுத்து திமுகவே இருக்காது எனக் கூறியிருப்பது விரக்தியிலும், தோல்வி பயத்திலும் தான். ஊழல் மலிந்துவிட்ட அரசாக உள்ள இந்த அதிமுக அரசை மத்திய அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவைத்தோ்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க உள்ளாா்கள். அதன் முன்னோட்டம் தான் மக்கள் சபைக்கூட்டம். இது ஆட்சிமாற்றத்துக்கான கூட்டம். திமுகவினா் மீது வழக்குப் போடும் காவல் துறையினா் ஆட்சியாளா்கள் பேரணி, கூட்டங்கள் நடத்தினாலும் அவா்கள் மீது வழக்குப்போடுவதில்லை அவா்.

பேட்டியின்போது, திமுக ஒன்றியச் செயலாளா் கந்தசாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் தம்பிசுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.