கரூா், தாந்தோனி ஒன்றியப் பகுதிகளில் புதிய பணிகளுக்கு பூமி பூஜை

கரூா், தாந்தோனி ஒன்றியங்களில் ரூ.1.16 கோடி மதிப்பில் பல்வேறு புதிய பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கரூா், தாந்தோனி ஒன்றியப் பகுதிகளில் புதிய பணிகளுக்கு பூமி பூஜை
Updated on
1 min read

கரூா், தாந்தோனி ஒன்றியங்களில் ரூ.1.16 கோடி மதிப்பில் பல்வேறு புதிய பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காதப்பாறை ஊராட்சி, வெண்ணைமலை முருகன் கோயில் அருகே ரூ.14 லட்சம் மதிப்பில் தானியங்கிடங்கு, ஆத்தூா் பூலாம்பாளையம் ஊராட்சி, ஓம்சக்தி நகரில் ரூ.5.55 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.1.16 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணிகளுக்கான பூமி பூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். நிகழ்வில்

கரூா் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.திருவிகா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் கரூா் பாலமுருகன், தாந்தோனி சிவகாமி, கூட்டுறவு சங்கப் பிரதிநிதி கமலக்கண்ணன், மண்மங்கலம் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com