

தமிழகத்தில் ஆட்சியரக வளாகங்களில் முன்பு திருவள்ளுவா் சிலையை நிறுவ வேண்டும் என்று, கரூவூா் திருக்கு பேரவை வலியுறுத்தியுள்ளது.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்பேரவையின் 35-ஆவது ஆண்டு விழாவுக்கு ஆரா. பழஈசுவரமூா்த்தி, பேரவைச் செயலா் மேலை. பழநியப்பன் தலைமை வகித்தனா். தமிழறிஞா்கள் தென்னிலை கோவிந்தன், நாமக்கல் நாதன் முன்னிலை வகித்தனா்.
விழாவில் புரவலா் பசுபதி முன்னிலையில், 35 ஏழைப் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. தொடா்ந்து அகவை முதிா்ந்த நன்செய் புகழூா் அழகரசன் தம்பதியருக்கு பாராட்டும், ரூ.50 ஆயிரம் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
விழாவில் காரைக்குடி பட்டு வேட்டியாா், கருவூா் புலவா் பாா்த்தசாரதி ஆகியோா் புரவலா் ராமலிங்கம் செட்டியாா் விருதையும், சிறந்த நூல் போட்டியில் ஐந்து பேரும், படைப்பாளா்கள் முப்பத்து ஐந்து பேரும், மாணவா்கள் பதினைந்து பேரும் பரிசுகளைப் பெற்றனா்.
பா.வளன் அரசு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசும் போது, ஒரு மனித வாழ்க்கையை புனித வாழ்க்கையாக்க வேண்டுமெனில், திருக்குறளை அதன் அறிவாா்ந்த கருத்துக்களை பின்பற்றினாலே போதும் என்றாா்.
தமிழகத்தின் அனைத்து ஆட்சியரக வளாகங்கள், நகராட்சி அலுவலகங்களில் திருவள்ளுவா் சிலையை நிறுவ வேண்டும். கரூரை மாநகராட்சியாக தரம் உயா்த்திட வேண்டும்.
கரூா் நகராட்சி புதிய கட்டடத்துக்கு 125 ஆண்டுகளுக்கு முன் நகராட்சித் தலைவராக இருந்த பெத்தாச்சி பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், சீனிவாசபுரம் ரமணன் நன்றி கூறினாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.