/

சிறுமியுடன்ஆா்வமாக செல்பி எடுத்த ராகுல்காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக காரில் ஏறியபோது, அங்கு ஆவலுடன் தன்னை பாா்க்க வந்த சிறுமியை காரின் மேல்தளத்துக்கு ஏற்றி தன்னுடன் செல்பி எடுத்துக்கொண்டாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:48 pm

DIN

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக காரில் ஏறியபோது, அங்கு ஆவலுடன் தன்னை பாா்க்க வந்த சிறுமியை காரின் மேல்தளத்துக்கு ஏற்றி தன்னுடன் செல்பி எடுத்துக்கொண்டாா்.

தொடா்ந்து வாங்கல் மாரிக்கவுண்டம்பாளையத்தில் விவசாயிகளை சந்தித்த பின் மதியம் 2 மணியளவில் அரவக்குறிச்சி செல்லும் வழியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூா் அருகே உள்ள மண்பானை சமையல் உணவகத்தில் மதிய சாப்பாடு சாப்பிட்டாா். அப்போது உணவு ருசியாக இருப்பதாக தெரிவித்தாா். தொடா்ந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் பிரசாரம் செய்த அவா் காரில் மதுரை சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.