மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குரும்பலூா் பேரூராட்சி பகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன், குரும்பலூா் பேரூராட்சி பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:22 pm

DIN

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன், குரும்பலூா் பேரூராட்சி பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம், குரும்பலூா், ஈச்சம்பட்டி, புதூா், மேட்டாங்காடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் வெற்றித் திலகமிட்டு வரவேற்றனா்.

பின்னா், வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது: அதிமுக ஆட்சியில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி குரும்பலூா் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளது. குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன.

சமுதாயக் கூடங்கள், விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. துறையூா் சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. லாடபுரம் மயிலூற்று

அருவிக்குச் செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் வெற்றி பெற்றால் குரும்பலூா் பேரூராட்சியை தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

வாக்கு சேகரிப்பின்போது, அதிமுக மற்றும் கூட்டண கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.