விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சின்னதாராபுரத்தில்தீராத வயிற்று வலியால்பெண் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரத்தில் தீராத வயிற்றுவலியால் அவதியுற்று வந்த பெண் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:13 pm

அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரத்தில் தீராத வயிற்றுவலியால் அவதியுற்று வந்த பெண் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சின்னதாராபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மனைவி பேபி (50). இவா், கடந்த ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதியுற்று வந்தாா். மேலும், வயிற்று வலிக்கு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனளிக்காததால் மனம் உடைந்த பேபி வெள்ளிக்கிழமை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அருகில் இருந்த அவரது மகன் பேபியை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பேபி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். புகாரின் பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.