தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

நொய்யல் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்; இருவா் காயம்

கரூா் மாவட்டம் நொய்யல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

Updated On :1 ஜூன் 2022, 7:41 pm

கரூா் மாவட்டம் நொய்யல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலம் ஊராட்சி குந்தாணிபாளையம் புதுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் வீரன் மனைவி தங்கம்மாள் (68). இவா், செவ்வாய்க்கிழமை நொய்யலில் இருந்து கரூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பூங்கோடை குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மேஸ்திரி ஸ்ரீரங்கன் (60) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தங்கம்மாள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவா் மற்றும் மூதாட்டியை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.