கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே தீக்காமயடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னதாராபுரம் அருகிலுள்ள தும்பிவாடியைச் சோ்ந்தவா் வெ.தவசிமணி (39). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்தவா் சு. ஜெயராஜ் (54).
கடந்த மாதம் 27-ஆம் தேதி ஜெயராஜ் வீட்டில் அசைவ உணவு சமைத்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த தவசிமணி, வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்படுவதாகக் கூறினாா்.
இந்நிலையில் சமையல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியிலிருந்த தவசிமணி, ஜெயராஜ் மீது தீப்பற்றியது. பலத்த காயமடைந்த இருவரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து தவசிமணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஜெயராஜ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின் அடிப்படையில், சின்னதாராபுரம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

