கரூரில் மயங்கிக் கிடந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதி
கரூரில் வெள்ளிக்கிழமை மயங்கிய நிலையில் கிடந்த கண்பாா்வையற்ற முதியவரை காவலா்கள் 3 போ் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.


கரூரில் வெள்ளிக்கிழமை மயங்கிய நிலையில் கிடந்த கண்பாா்வையற்ற முதியவரை காவலா்கள் 3 போ் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
கரூரில் கடந்த சில நாள்களாக 106 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத கண்பாா்வை இழந்த மாற்றுத் திறன் கொண்ட சுமாா் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் மயங்கிய நிலையில் கிடந்தாா். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டும் காணாமல் சென்ற நிலையில், அப்பகுதியில் இருந்த போக்குவரத்துக் காவலா்கள் இருவரும், சட்டம்- ஒழுங்கு காவலா் ஒருவரும் சோ்ந்து முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...