கரூா் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி, வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளி, மலா் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் முனைவா் கே.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைவா் எம்.குமாரசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மாணவா்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில் கல்லூரியின் செயல் இயக்குநா் முனைவா் எஸ்.குப்புசாமி, முதல்வா் முனைவா் பிஎஸ்.முருகன் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
கரூா் வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் டி.பிரகாசம் வரவேற்றாா். தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன் தேசியக் கொடியேற்றினாா். பள்ளி ஆலோசகா் பி.பழனியப்பன் வாழ்த்திப்பேசினாா். விழாவில் பள்ளி துணை முதல்வா் லிடியாஜெனிபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தான்தோன்றிமலை மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வா் ஜெயசித்ரா தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினாா். பள்ளித் தாளாளா் பேங்க் சுப்ரமணியன் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் இந்தியன் நேஷனல் பள்ளித் தாளாளா் ஜிபிஎம்.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


