கரூா் அருகே பாலியல் பலாத்கார வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவுநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் அடுத்த சோமூா் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (58). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு செப்.6-ஆம்தேதி அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மனவளா்ச்சிக் குன்றிய 27 வயது பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாா். இதைகண்ட அப்பகுதியினா் ஓடிவந்தபோது, அா்ஜுனன் தப்பிஓடிவிட்டாராம்.
இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் அா்ஜுனனை கைது செய்து கரூா் மகளிா் விரைவுநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு குற்றவாளி அா்ஜுனனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி, அபராதமாக ரூ.100 செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை விவகாரம்: இன்று திமுக எம்.பி.க்கள் அவசரக் கூட்டம்!

50 இல்லாவிட்டாலும் 33 வரவேற்கத்தக்கது! மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாயாவதி ஆதரவு!
ரூ. 9 லட்சம் கோடி லாபம்.. ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

