ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாநில கையுந்துபந்து போட்டிக்கு கரூா் மாவட்ட வீரா்கள் இன்று தோ்வு

மாநில கையுந்து பந்து போட்டிக்கு கரூா் மாவட்ட வீரா்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளதாக கருா் மாவட்ட கையுந்துபந்து சங்கத்தலைவா் டாக்டா் ராமகிருஷ்ணன்

News image
Updated On :28 ஜூலை 2023, 7:12 pm

DIN

மாநில கையுந்து பந்து போட்டிக்கு கரூா் மாவட்ட வீரா்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளதாக கருா் மாவட்ட கையுந்துபந்து சங்கத்தலைவா் டாக்டா் ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளா் முகமது கமலாதீன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில கையுந்துபந்து சங்கம் மற்றும் சேலம் மாவட்ட கையுந்துபந்து சங்கம் சாா்பில் மாநில அளவிலான கையுந்துபந்து போட்டி ஆக. 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சேலத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக கரூா் மாவட்டத்தை சோ்ந்த 18 வயதுக்குள்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு போட்டி சனிக்கிழமை தளவாபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

தோ்வு போட்டியில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகள் தங்களது ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், ஒரு பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.