அக்.26-இல் ஆளுநர் மாளிகை முற்றுகை: எம். எச். ஜவாஹிருல்லா

ஆளுநரின் ஏதேச்சதிகார நடவடிக்கையைக் கண்டித்து அக்.26-இல் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
அக்.26-இல் ஆளுநர் மாளிகை முற்றுகை: எம். எச். ஜவாஹிருல்லா

ஆளுநரின் ஏதேச்சதிகார நடவடிக்கையைக் கண்டித்து அக்.26-இல் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், அண்ணா பிறந்த நாளில் தமிழக சிறைகளில் சுமார் 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் வலியுறுத்தி வந்துள்ளோம். இந்த கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு அண்ணா பிறந்த நாலில் 49 நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு பரிந்துரை செய்து ஏறத்தாழ ஒரு மாதமாகியும் ஆளுநர் இந்த கோப்புக்கு ஒப்புதல் தராமல் காலம் கடத்தி வருகிறார். ஆளுநரின் இந்த ஏதேச்சதிகார நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை வரும் அக்.26-ம்தேதி முற்றுகையிட உள்ளோம். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படக்கூடிய பல்வேறு தீர்மானங்கள் பல்வேறு கோப்புகளாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் ஆளுநர் ஒப்புதல் தராமல் இருப்பது ஜனநாயக விரோத செயலாக, அரசியலமைப்புச்சட்டத்தின் விழுமியங்களுக்கு முரணான செயலாக அமைந்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவை, தமிழகத்தில் பாரம்பரிய சித்தவைத்திய பல்கலைக்கழகம் உருவாக்க சென்றாண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த கோப்பும் ஆளுநர் ஒப்புதலுக்காக மாளிகையில் உறங்கிக்கொண்டிருக்கிறது. சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்க வேண்டி தமிழக அரசு பரிந்துரைத்தும் ஆளுநர் தனது விருப்பத்திற்கு ஒருவரை நியமித்திருக்கிறார். இதுவும் ஆளுநர் தமிழக செயல்பாட்டில் குறுக்கிடுவதாக உள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. 

அதனுடைய ஒருடிவம்தான் தமிழகம் உள்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை பயன்படுத்தி, அந்த மாநில ஆட்சிக்கு எதிராக, அவர்களுடைய நடவடிக்கைகளை முடக்கும் வகையில் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிரோம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை சாதாரண நடவடிக்கையாக கருத முடியாது. இப்போது இருக்கக்கூடிய ஜனநாயக நெறிமுறைகளை எல்லாம் வீழ்த்திவிட்டு ஒரு சர்வாதிகார நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. மாநிலத்தின் முழுமையான அதிகாரம் ஒன்றிய அரசிடம் செல்லும்போது, ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் நிலை ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தலில் செலவீனம் குறைவு என்பது தவறான கண்ணோட்டம். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளிவந்ததை வரவேற்கிறோம். இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பாஜக மக்களுக்கு செய்த விரோத கொள்கைக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டதை மறுக்க முடியாது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் அதிமுகவின் வாக்குகளால் மட்டுமே அது சட்டமாக நிறைவேறியது. 

அதிமுக கொள்கை என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. பாஜகவில் இருந்து தற்காலிகமாகத்தான் அதிமுகவிலகியுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து ஒவ்வொன்றாக வெளியேறி வருவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவிழந்து வருகிறது. ஆனால் காங்.திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாள்தோறும் வலுவடைந்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நீர் தருவது கர்நாடகத்தின் கடமை. காவிரி நீர் மேலாண்மை என்ன உத்தரவு விட்டுக்கிறதோ அந்த கடமையை நிறைவேற்றாதது மிகப்பெரிய குற்றம் என்றார் அவர். பேட்டியின்போது தமுமுக பொதுச் செயலாளர் ஜெ.ஹாஜாகனி, பொருளாளர் முஸ்தபா, மனித நேயமக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது, கரூர் மாவட்ட தமுமுக செயலாளர் எம்.அன்சாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com