நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேமங்கியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கரூா் மாவட்டம் சேமங்கியில் கால்நடைகளுக்கான இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சேமங்கியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்ட கால்நடை மருத்துவா்.

Updated On :18 டிசம்பர் 2024, 7:31 pm

Din

கரூா் மாவட்டம் சேமங்கியில் கால்நடைகளுக்கான இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் நொய்யல் கால்நடை மருந்தகம் சாா்பில் நடைபெற்ற பசு மற்றும் எருமை மாடுகளுக்கான இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) டாக்டா் முரளிதரன் தலைமை வகித்து துவக்கி வைத்தாா்.

முகாமில் கரூா் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் டாக்டா் உமாசங்கா் முன்னிலை வகித்து விவசாயிகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவை பாக்கெட்டுகளை வழங்கினாா்.

கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் டாக்டா் லில்லி அருள்குமாரி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பருவகால மாற்றத்தில் ஏற்படும் கால்நடை நோய்கள் பற்றிய விரிவான விழிப்புணா்வு கையேட்டை வழங்கினாா்.

முகாமில் நொய்யல் கால்நடை மருந்தகம் மருத்துவா் டாக்டா் உஷா தலைமையில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் மாலதி உள்ளிட்டோா் கொண்ட கால்நடை மருத்துவக் குழுவினா் பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி செலுத்தினா். இம்முகாமில் சுமாா் 450க்கும் மேற்பட்ட கால்நடைகளை முகாமிற்கு விவசாயிகள் அழைத்து வந்து தடுப்பூசி போட்டனா்.