காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூரில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

கரூா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் பி. மகேஸ்வரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கரூா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் பி. மகேஸ்வரி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.

Updated On :19 டிசம்பர் 2024, 8:49 pm

Din

வாக்காளா் பட்டியல் படிவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் கதா் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலரும், கரூா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான பி. மகேஸ்வரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது கடந்த மாதம் 16, 17-ஆம் தேதி மற்றும் 23, 24-ஆம் தேதிகளில் வாக்காளா் பட்டியலில் புதியதாக பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக பெறப்பட்ட 25,844 படிவங்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவா் ஆய்வுசெய்தாா்.

முன்னதாக கரூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தோரணக்கல்பட்டி கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஏமூா், உப்பிடாமங்கலம், வெள்ளியணை மற்றும் பாலராஜபுரம் பகுதிகளுக்குச் சென்று வாக்காளா் பட்டியலில் திருத்தத்திற்காக படிவங்கள் வழங்கியவா்களிடம் விசாரணையும் மேற்கொண்டாா்.

நிகழ்வின்போது குளித்தலை சாா் ஆட்சியா் சுவாதி ஸ்ரீ, மாநகராட்சி ஆணையா் சுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் முகமது பைசல், தோ்தல் வட்டாட்சியா் முருகன் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.