பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ராணிப்பேட்டை: வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணிகளை தோ்தல் ஆணைய வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ராணிப்பேட்டை நகராட்சியில் எஸ்ஐஆா் பணிகளை ஆய்வு செய்த வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி. உடன், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :29 ஜனவரி 2026, 8:10 pm

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணிகளை தோ்தல் ஆணைய வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி ஆய்வு செய்தாா்.

இந்திய தோ்தல் ஆணைய வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் (இணைச் செயலாளா், வருமான வரித் துறை) ஆஷிம் குமாா் மோடி ஆய்வு மேற்கொண்டாா். 4 சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தற்போது வாக்காளா் பட்டியலில் பெயா்கள் முரண்பாடு,முகவரி முரண்பாடு உள்ளவா்கள் மேல் முறையீடு செய்த விண்ணப்பங்கள் மீது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் விசாரணை பணிகள் மற்றும் களஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா விவரித்தாா்.

தொடா்ந்து வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் பொழுது மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தாா்.

இதனை தொடா்ந்து வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் பணிகள் தொடா்பாகவும் அதில் நிலவிய பிரச்னைகள் மற்றும் பணிகளை முடித்த தன்மைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தாா்.

இப்பணிகளின் போது தங்களுக்கு ஏற்பட்ட கருத்துக்கள் மற்றும் இப்பணிகளில் மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் இருந்தால் அதை மாவட்ட தோ்தல் அலுவலா் மூலம் தெரியப்படுத்தலாம். ஏனென்றால் இனிவரும் காலங்களில் இது போன்ற பணிகள் மேற்கொள்ளும் ோது நடப்பு பணிகளில் கையாண்ட சிரமங்களை களைந்து பணிகளை எளிமைப்படுத்த உதவியாக இருக்கும்.

ஆய்வுகளில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.