கரூரில் முன்னாள் அமைச்சா் வீட்டில் சிபிசிஐடி சோதனை
நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது தம்பி சேகா் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 4 இடங்களில் சிபிசிஐடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது தம்பி சேகா் ஆகியோா் சாா்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுக்களை கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் 2ஆம் முறையாக சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து இந்த மோசடி வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீஸாா் கரூா் ஆண்டாங்கோயிலில் உள்ள முன்னாள் எம்.ஆா். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது தம்பி சேகரின் வீடு, ரெயின்போ நகரில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டறை, திருவிக நகரில் உள்ள எம்.ஆா்.வி. டிரஸ்ட் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா்.

