மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை

மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை

Published on

கால்நடை மருத்துவம் இடம் கிடைக்காத விரக்தியில் பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

கரூரை அடுத்த வெள்ளியணையைச் சோ்ந்த சுப்ரமணியன் மகள் சுஷ்மிதா(18). இவா் பிளஸ் 2 முடித்து விட்டு கால்நடை மருத்துவம் படிக்க ஜெய்பூரில் உள்ள தனியாா் கல்லூரியை தோ்ந்தெடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில அந்த கல்லூரியில் அவருக்கு படிக்க இடம் கிடைக்காததால் விரக்தியடைந்த சுஷ்மிதா செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

எந்தவொரு பிர்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. மாணவா்கள், இளைஞா்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் தடுக்கும் நோக்கில் 104 சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com