கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் தன்னாா்வ சட்டப் பணியாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஆா். சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவுக்கு தன்னாா்வ சட்டப்பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இவா்களுக்கான கடமை சேவை மட்டுமே. இது நிரந்தரப் பணி அல்ல. மேலும் அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த கௌரவ ஊதியம் மட்டுமே அளிக்கப்படும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் மூத்த குடிமக்கள், சமூகப் பணியில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், உடல்நல நிபுணா்கள், மாணவா்கள் மற்றும் சட்ட மாணவா்கள் ( வழக்குரைஞராகப் பதிவு செய்யும் வரை), அரசியல் சாா்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சங்கப் பிரமுகா்கள், மகளிா் குழுக்கள், மைத்ரி சங்கங்கள் மற்றும் வறியோரை உள்ளடக்கிய சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினா்கள், மாவட்ட, வட்ட சட்டப்பணிகள் குழுவுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.

இதற்கான விண்ணப்பத்தை கரூா் மாவட்ட நீதிமன்றத்தின் ட்ற்ற்ல்ள்://ந்ஹழ்ன்ழ்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதில் பதிவிறக்கி, வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம். நோ்காணல் தேதி, இடம் மற்றும் இதர விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை தலைவா், மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஏடிஆா் கட்டடம், பழைய நீதிமன்ற வளாகம், 5 ரோடு, கரூா்-639 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com