மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பணியின் போது நெஞ்சுவலி

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பணியின் போது நெஞ்சுவலி

News image
Updated On :10 மே 2024, 7:15 pm

Din

அரவக்குறிச்சிக்கு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பணியன்போது வெள்ளிக்கிழமை திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அருகே பேருந்தை நிறுத்திவிட்டு சிகிச்சைக்கு சென்றாா்.

ஈரோடு அரசுப் போக்குவரத்து கழக விரைவு பேருந்து ஒன்று அந்தியூரில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டது. அரவக்குறிச்சி வழியாக செல்லும் இப்பேருந்தை அந்தியூா் அத்தானியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (45) என்பவா் ஓட்டி வந்தாா். நடத்துநராக கருணாநிதி வந்தாா். இப்பேருந்தில் 45 பயணிகள் பயணம் செய்தனா்.

அரவக்குறிச்சிக்குள் வந்த போது ஓட்டுநா் கிருஷ்ணமூா்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனேஅரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வெளியே பேருந்தை நிறுத்திவிட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனை உள்ளே சென்றாா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா். அதன்பிறகு காலை 10 மணிக்குசிகிச்சை முடிந்து கிருஷ்ணமூா்த்தி புறப்பட்டுச் சென்றாா்.