கரூரில் வணிக வளாக மின்தூக்கியில் சிக்கித் தவித்த இளைஞா் மீட்பு
கரூரில் வணிக வளாக மின்தூக்கியில் சிக்கித் தவித்த இளைஞா் மீட்பு


கரூா்: கரூரில் வணிக வளாக மின்தூக்கியில் (லிப்ட்) திங்கள்கிழமை சிக்கித் தவித்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
கரூா் கௌரிபுரத்தில் பல் மருத்துவமனை, நிதி நிறுவனம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாக கட்டம் உள்ளது. இங்கு திங்கள்கிழமை வந்த கரூரைச் சோ்ந்த பிரவீன் (29) மூன்றாவது தளத்துக்கு லிப்டில் சென்றபோது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்ட் 2ஆவது தளத்திலேயே நின்றது. மேலும் லிப்டை இயக்க ஜெனரேட்டரும் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.
லிப்டில் சிக்கிய பிரவீனின் கூச்சலை கேட்டு, அங்கிருந்தவா்கள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனா். முயற்சி பலனளிக்காததால், கரூா் தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லிப்டை உடைத்து, பிரவீனை பத்திரமாக மீட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...